actor vivek twit for rajini political entry
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என எதிர்பார்ப்பில் மூழ்கி இருந்தவர்கள், அவருடைய ரசிகர்கள் மட்டும் அல்ல திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் தான்.
2017ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று தன்னுடைய அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறி இருந்தார் ரஜினி. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ள இந்த அரசியல் பிரவேச அறிவிப்பால் பிரபலங்கள் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என்றே கூறலாம்.

ஆம்... தனிக் கட்சி துவங்குவதாகக் கூறி அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சியைத் தான் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார். பல வருடங்களாக அரசியலுக்கு வருவது போல், பேசி மட்டுமே வந்த இவர் இன்று அதிரடியாய் தன்னுடைய பதிலை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத நடிகர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து ட்விட் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளது... அதிர்ச்சி ஆனால் ஆனந்த அதிர்ச்சி! இனி அவர் பின் வாங்கக் கூடாது. உணர்ச்சிப் பெருக்கில் ரசிகர்கள் கட்டுப்பாடு மீறல் கூடாது. சட்டம் ஒழுங்கு முக்கியம். வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
