உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸையே நம்ம நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் தெறிக்கவிட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்களை கிண்டலடிக்க மட்டுமே மீம்ஸ்களை பயன்படுத்தி வந்த நெட்டிசன்கள், தற்போது சமூகத்திற்கு தேவையான நல்ல செய்திகளை மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்ப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படித்தான் தற்போது உயிர் கொல்லி நோயான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தங்களது உயிரை பயணம் வைத்து களம் இறங்கியுள்ள மருத்துவர்கள், செவிலியர்கல், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களை கெளரவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் விதமாகவும் மீம்ஸ்களை கிரியேட் செய்து, அதனை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். 

இதையும் படிங்க: சிம்ரனுக்கு அடுத்து த்ரிஷா... குட்டை டவுசரில் கெட்ட ஆட்டம் போட்டு டிக்-டாக்...!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ந்துள்ளார். சமீபத்தில் விவேக் காமெடியை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

ஊரடங்கை மதிக்காமல் வெளியே வந்த நபர் போலீசிடம் சிக்கி கொள்கிறார். நான் மீடியாவில் இருக்கிறேன் என்று கூறும் அந்த நபரிடம் போலீசார் எந்த மீடியா என்று கேட்க அவரோ சோசியல் மீடியா என நக்கலாக பதிலளித்து போலீசிடம் அடி வாங்குவது போன்று அந்த மீம்ஸ் கிரியேட் செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 15 வயசிலேயே இப்படியா?... முன்னணி ஹீரோயின்களை கதறவிடும் அனிகா... வைரலாகும் போட்டோ....!

இந்த மீம்ஸை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விவேக், Wow! செம்ம மீம்!! I m taken aback by the wit n humor of meme creators!! மேலும் இது போன்ற நல்ல மீம்ஸ்களை தொடர்ந்து பதிவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.