விவேக்கின் மனைவி அருட்செல்வி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மகள்களில் மூத்தவர் அமிர்ந்த நந்தினி. இரண்டாமவர் தேஜஸ்வனி. மூன்றாமவர் மறைந்த பிரசன்னகுமார். 

விவேக்கின் மனைவி அருட்செல்வி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மகள்களில் மூத்தவர் அமிர்ந்த நந்தினி. இரண்டாமவர் தேஜஸ்வனி. மூன்றாமவர் மறைந்த பிரசன்னகுமார். இசையின் மீது கொண்ட நாட்டத்தால் பிரசன்னா லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் கீபோர்டு பிரிவில் பட்டம் வென்றவர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

2015ம் ஆண்டு விவேக் அவர்களின் மகன் பிரசன்னகுமார் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரமடைந்தார். சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தவர் விவேக்கின் மகன் பிரசன்னகுமார். இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் 40 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் பிரசன்னகுமாரின் உடல்நிலை மோசமடைந்து அவர் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து விவேக் தனது மகன் நினைவாக சாய் பிரசன்னா பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி மரங்களை நடும் பணியில் ஈடுபட்டு வந்தார். பிரசன்ன குமார் இல்லாத வேதனையை போக்கும் வகையில் நடிகர் விவேக்கும், அவரது மனைவியும் இணைந்துடெஸ்ட் டியூப் மூலம் இரட்டை பெண்குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். தற்போது அந்தக் குழந்தைகளுக்கு 4 வயது ஆகிறது.