நவீன தொழில்நுட்ப காலத்தில், அனைத்து வேலைகளும் சுலபமாகி விட்டது. இதன் விளைவு, நாளுக்கு நாள் குழந்தைகள் முதல் இளைஞர்கள் என அனைவரும் செல்போன், இன்டர்நெட் போன்றவற்றிற்கு அடிமையாகி வருகிறார்கள். இதன் மூலம் எதிர்பாராத பல தவறுகளும் நடக்கிறது.  

இந்த நிலையில், அதிகமாக இளைஞர்கள் பயன்படுத்தும் நெட் சேவையை, குறைக்கும் விதமாக  ஜப்பான் நாட்டினர் கையாண்டு வரும் முறை குறித்து, நடிகர் விவேக் முதல் முறையாக ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளது ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வாரத்தில் இரண்டு நாட்கள் இண்டர்நெட்டை இளையதலை முறையினர் பயன்படுத்த வேண்டாம் என்றும், அந்த இரண்டு நாட்களில் பெற்றோர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்றும், விளையாட்டில் ஈடுபடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் இண்டர்நெட்டில் அடிமையாகும் ஆபத்தும் நீங்குகிறது, குற்றச்செயல்களும் குறைகிறது என தெரிய வந்துள்ளது. என கூறி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.