actor visu walkout for asking kamalhassan political entry

மீண்டும் சூடுபிடித்துள்ளது தமிழ் நாடு அரசியல்... அரசியலுக்கு கடந்த ஆண்டு பிள்ளையார் சுழிப்போட்ட நடிகர் கமலஹாசன் நாளை தன்னுடைய கட்சியின் பெயர், சின்னம், முன்னணி நிர்வாகிகள் யார் என அறிவிக்க உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கமலின் இந்த அதிரடி அரசியல் பிரவேசம் கமல் ரசிகர்கள் மற்றும் தமிழகத்தில் நல்லாட்சி வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா? என ஒரு என்னத்தை உருவாக்கியுள்ளது.

கோலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான, ரஜினி கமல் என இருவருமே போட்டிப்போட்டு தன்னுடைய அரசியல் பிரவேசத்தை துவங்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டார். அவரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை நான் ஆதரிக்கிறேன் என்றார். பின் கமல் பற்றி கேட்டதற்கு, நீங்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள், கமல் பற்றி மட்டும் கேட்காதீர்கள் என்று கூறி பேட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். 

பொதுவாக எதற்கும் அவசரப்படாமல் பதில் அளிக்கக்கூடிய விசு, இப்படி செய்ய என்ன காரணம்? இவர் இப்படி கோபம் கொள்ளும் அளவிற்கு கமல் என்ன செய்தார்? என நமக்கு பல கேள்விகள் தோன்றினாலும் அதற்கு பதில் விசு தான் கூற வேண்டும்.