கடந்த 1 ஆம் தேதி முதல் கோலிவுட் திரையுலகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியிடப்படாமல் வெளிவர வேண்டிய படங்கள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. அதே போல் தொழில் நுட்ப பணிகளும் முடங்கியுள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அணைத்து திரையரங்கங்களும் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த விவாதிக்க தமிழ் திரைப்பட கூட்டமைப்பின் கூட்டம் நேற்று கூடியது. இதில் தயாரிப்பாளர் சங்கத்தினர், இயக்குனர் சங்கத்தினர், மற்றும் பெப்சி உள்ளிட்ட முக்கிய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர். 

இந்த கூடத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால்... எங்கள் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து விவாதித்தோம் நாளையும் இன்றும் தொடர்ந்து இது குறித்து விவாதிக்க உள்ளோம். டிஜிட்டல் சேவை அமைப்பினருடன் பல சுற்றுக்கள் பேசி விட்டோம். இனி பேச்சு வார்த்தைக்கு இடம் இல்லை என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த பிரச்சனை தீர்வதற்கு டிஜிட்டல் சேவை அமைப்பினரும், தியேட்டர் உரிமையாளர்களும் தான் பேச வேண்டும். அதனால் வேலை நிறுத்தம் தொடர்பாக கமல்ஹாசனை சந்தித்து விளக்கி இருப்பதாகவும் விரைவில் ரஜினிகாந்தை சந்தித்து இது குறித்து பேச உள்ளதாகவும் கூறியுள்ளார்.