நடிகர் விஷால் தற்போது நடித்து வரும் 31 ஆவது படத்தின் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்ட போது, எதிர்பாராத விதமாக அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாய்க்கியுள்ளது. 

நடிகர் விஷால் தற்போது நடித்து வரும் 31 ஆவது படத்தின் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்ட போது, எதிர்பாராத விதமாக அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாய்க்கியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் விஷால் அடுத்தடுத்து ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படங்களிலேயே நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், 'எனிமி' மற்றும் 'துப்பறிவாளன் 2 ' என இரண்டு ஆக்ஷன் படங்களை தன் கையில் வைத்துள்ள விஷால், தன்னுடைய 31 ஆவது படத்தை, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் என்பவர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இடம்பெறும் சண்டை காட்சி அண்மையில் படமாக்க பட்டுள்ளது. அப்போது விஷாலை வில்லன் தூக்கி எறிவது போன்ற காட்சியை படமாக்கியுள்ளனர். மிகவும் பாதுகாப்பான முறையில் சண்டை காட்சி எடுக்கப்பட்டு வந்த நிலையிலும், எதிர்பாராத விதமாக விஷால் ஒரு இரும்பு ராடில் மோதி கீழே விழுந்துள்ளார். அப்போது அவருக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக பிசியோ தெரபி மருத்துவர்களை கொண்டு விஷாலுக்கு படக்குழுவினர் அளித்துள்ளனர். இதன் காரணமாக படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

பெரிய அடி இல்லை என்றாலும், வலி குறையாததால் விஷால் ஓரிரு நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. விஷால் ஏற்கனவே 'எனிமி' படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில், அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தில் பிரச்சனை காரணமாக 'மிஷ்கின்' விலகி விட்டதால்... இவரே அந்த படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. எனவே இந்த 31 ஆவது படத்தின் படப்பிடிப்பை முடிந்த பின்னர் மீண்டும் துப்பறிவாளனை விஷால் தூசு தட்டி கையில் எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.