பிரபல மாடல் நடிகை ஒருவரையும் அவரது தாயாரையும் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான் என்று பிரபல தமிழ், மலையாள நடிகர் ஒப்புக்கொண்டத்தை அடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.

சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’, தனுஷ் நடித்த ‘மரியான்’, விஷால் நடித்த ‘திமிரு’இன்னும் வெளியாகாத கவுதம் மேனன் விக்ரம் கூட்டணியின் ‘துருவ நட்சத்திரம்’ உள்பட பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விநாயகன். இவர் மீது மாடல் அழகி மிருதுளாதேவி என்பவர் சமீபத்தில் ‘மீடூ’ புகார் கூறியிருந்த நிலையில் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்களை காவல் நிலையத்தில் சமர்ப்பித்து புகார் கொடுத்தார். மேலும் தனது தாயாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்தபோது இருவரையும் படுக்கைக்கு அழைத்ததாகவும் மிருதுளா காவல்துறையினர்களிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விநாயகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதனையடுத்து நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார்.

இந்த நிலையில் மாடல் அழகி மிருதுளாதேவி காவல்துறையில் மிக வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பித்த நிலையில் அவருக்கும் அவரது தாயாருக்கும் பாலியல் தொல்லை அளித்தது உண்மைதான் என நடிகர் விநாயகன் ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் தனது தவறை விநாயகன் ஒப்புக்கொள்ள முன்வந்துள்ளதால் அவர் விரைவில் கைதாகக்கூடும் என்று தெரிகிறது.