actor vijays common dp released for this special occasion

தளபதி விஜய் என்றாலே அவரது ரசிகர்களுக்கு தனி பாசம் தான். உலகெங்கிலும் இவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, விஜய் மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் இந்த அளவு கடந்த பாசத்திற்கு முக்கிய காரணம், இவரின் தன்னடக்கமும், பண்பும் தான்.

வரும் ஜூன் 22 அன்று விஜய்-ன் பிறந்த நாள் வரவிருக்கிறது. அவரது பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாட விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய திட்டங்களை தீட்டி இருக்கின்றனர். அவரது படங்களை ரீ-ரிலீஸ் செய்வது, கோவிலில் வழிபாடு, மக்கள் நல உதவி என பல திட்டங்களை செயல்படுத்த காத்திருக்கும் விஜய் ரசிகர்கள், சமீபத்தில் ஒரு விஷயத்தை செய்திருக்கின்றனர்.

விஜயின் பிறந்த நாளை ஒட்டி காமென் டிபி ஒன்றை தயார் செய்திருக்கின்றனர். அந்த காமென் டிபி-ஐ இயக்குனர் அட்லீயை வைத்து, டிவிட்டரில் ரிலீசாக்கி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். மேலும் இந்த காமன் டிபி-ஐ விஜயின் பிறந்த நாள் அன்று அனைவரும் டிபியாக வைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கின்றனர்.

THALAPATHY VIJAY BDAY CDP pic.twitter.com/9nr9FfiLzu

— atlee (@Atlee_dir) June 17, 2018

விஜயின் இந்த காமென் டிபி-ஐ இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிமான விஜய் ரசிகர்கள் ரீ-ட்வீட் செய்திருக்கின்றன. இந்தியாவில் ஒரு நடிகரின் காமென் டிபி இத்தனை ஆயிரம் முறை ரீ-ட்வீட் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. விஜயின் டிபி கூட சாதனைகள் செய்யும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த சம்பவம்.