“நுவ்விலா” என்ற படத்தில் துணை கதாநாயகனாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்த விஜய் தேவரகொண்டா முதன் முறையாக  “பெல்லி சூப்லு” என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.2017ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படம் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையே தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்தார். படம் பக்கா கமர்ஷியல். காதல், லிப்லாக், படுக்கையறை காட்சிகள் என சகட்டுமேனிக்கு கிளுகிளுப்பான அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தது.

 

இதையும் படிங்க: இயக்குநர் அட்லி வீட்டில் எதிர்பாராத விதமாக நடந்த சோகம்... துக்கத்துடன் பகிர்ந்த உருக்கமான பதிவு...!

கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், அதுவும், இரண்டே படங்களில் ஒருவரை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. சைடுகேப்பில் விஜய்க்கு ரசிகைகள் பட்டாளமும் அதிகரிக்க ஆரம்பித்தது. 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கில் ரைசிங் ஸ்டாராக உருவெடுத்த விஜய் தேவரகொண்டா 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

தமிழில் கூட நடிகையர் திலகம், நோட்டா போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகைகளின் மனதிலும் ஹேண்ட்ஸம் ஹீரோவாக இடம் பிடித்தார். லாக்டவுனுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் ரசிகைகளின் மனதிலும்  சரி, சினிமாவிலும் சரி விஜய் தேவரகொண்டாவின் முன்னணி ஹீரோ இடம் அப்படியே தான் உள்ளது. 

 

இதையும் படிங்க: கொசுவலை போன்ற மெல்லிய புடவையில் அனிகா... தேவதையாய் ஜொலிக்கும் வைரல் போட்டோஸ்...!

கொரோனா நேரத்தில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்து வரும் விஜய் தேவரகொண்டா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். “சில தயாரிப்பு நிறுவனங்கள், நான் அவர்களின் படத்தில் நடிப்பதாக பொய் சொல்லி, நடிகர்களின் தேர்வை நடத்தி வருவதாக அறிந்தேன். நான் எந்த படத்தில் நடிப்பதாக இருந்தாலும்,  அதை முறையே எனது சமூக வலைதளங்களில் அறிவிப்பேன். அப்படி போலியாக ஆடிஷன் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளோம். தயவு செய்து, இது போன்ற தவறான தகவல்களை அப்படியே நம்பாதீர்கள்'' என அவர் தெரிவித்துள்ளார். சில தயாரிப்பு நிறுவனங்கள், நான் அவர்களின் படத்தில் நடிப்பதாக பொய் சொல்லி, நடிகர்களின் தேர்வை நடத்தி வருவதாக அறிந்தேன். நான் எந்த படத்தில் நடிப்பதாக இருந்தாலும்,  அதை முறையே எனது சமூக வலைதளங்களில் அறிவிப்பேன். அப்படி போலியாக ஆடிஷன் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளோம். தயவு செய்து, இது போன்ற தவறான தகவல்களை அப்படியே நம்பாதீர்கள்'' என தன் பெயரில் நடக்கும் மோசடி குறித்து விளக்கமளித்துள்ளார்.