அழகில் மகளுக்கு போட்டி தான் போங்க.. திருமண நிகழ்விற்கு அட்டகாசமாக தயாரான அனிதா விஜயகுமார் - வைரல் வீடியோ!
Anitha Vijayakumar : பிரபல மூத்த நடிகர் விஜயக்குனர் அவர்களின் மூத்த மகளான அனிதா விஜயகுமாரின் மகளுக்கு சில தினங்களுக்கு முன்பு வெகு விமர்சையாக திருணம் நடந்து முடிந்தது.
தமிழ் திரையுலகில் கடந்த 62 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் மிக மூத்த நடிகர் தான் விஜயகுமார். இவருடைய முதல் மனைவி முத்துக்கண்ணு அவர்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் மூத்தவர் தான் அனிதா விஜயகுமார். அவரைத் தொடர்ந்து நடிகை கவிதா விஜயகுமார் மற்றும் நடிகர் அருண் விஜய் ஆகியோர் பிறந்தனர்.
நடிகர் விஜயகுமார் அவர்கள் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டவர் தான் பிரபல நடிகை மஞ்சுளா அவர்கள். அந்த தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் தான் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகிய மூன்று மகள்கள். நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் அனைவருமே நடிகர்களாக திரையுலகில் வலம் வந்தனர்.
ராயன் திரைப்படம்.. மாறுபட்ட வேடத்தில் இணையும் மெகா நடிகர் - அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் தனுஷ்!
ஆனால் அவருடைய மூத்த மகள் அனிதா விஜயகுமார் மட்டும் அதிலிருந்து விலகி, மருத்துவம் பயின்று இன்று கத்தார் நாட்டில் தனது கணவரோடு இணைந்து மருத்துவ பணியை செய்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவருடைய மகளுக்கு திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் பதிவிட்டு வருவதை நாம் தினமும் பார்த்து வருகிறோம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி பிரபலங்கள் அனிதா விஜயகுமாரின் மகளின் திருமணத்தில் நேரில் பங்கேற்று தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் திருமணத்திற்கு அவர் மணப்பெண்ணுக்கு இணையாக அலங்காரத்தோடு வந்திருந்தார். இப்பொது அவருக்கு மேக்கப் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை தற்பொழுது தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அது மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.