நடிகர் விஜய் விஸ்வாவுக்கு டாக்டர் பட்டம்... அப்படி என்ன சாதனை செய்தார்..?
நடிகர் விஜய் விஸ்வா அப்போது 2020 - 2021ஆம் ஆண்டு கொரோனா காலங்களில் மக்களுக்கு சேவை செய்ததற்காக நடிகர் விஜய் விஸ்வாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
கொரோனா தொற்று அதிகரிக்கும்போது மக்களுக்கு சேவை செய்ததற்காக ’சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம்' நடிகர் விஜய் விஸ்வாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது
.
'சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம்' சார்பில் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் வைத்து பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சென்னை மாவட்ட நீதிபதி என்.வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். நடிகர் விஜய் விஸ்வா அப்போது 2020 - 2021ஆம் ஆண்டு கொரோனா காலங்களில் மக்களுக்கு சேவை செய்ததற்காக நடிகர் விஜய் விஸ்வாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் கமலம் குழுமம் சேர்மன் ஜே.கே. முத்து, மங்கையர்கரசி பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.கார்த்திகேயன், ஏ.கே.ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நடிகர் விஜய் விஸ்வாசமீபத்தில் நடைபெற்ற ரோட்டரி சங்க மாநில அளவிலான பொதுக்குழுவில் ஆளுநர் ஜெய்கன், பாலகுரு முன்னிலையில் மாநில அளவிலான கௌரவ உறுப்பினர் பதவி நடிகர் விஜய் விஸ்வாவுக்கு வழங்கப்பட்டது. டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலையில் கௌரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துக் கொடுத்துள்ளார் விஜய் விஸ்வா. கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கும் உணவு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்களை வழங்கி உதவிய நடிகர் விஜய் விஸ்வா, சினிமாத் துறையில் இருக்கும் பிறரையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். தற்போது சாயம் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.