விஜய் - த்ரிஷா விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், நெட்டிசன்கள் இதுகுறித்து கலாய்த்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள் தொடர்பான கிசுகிசுக்கள் வருவது ஒன்றும் புதிதல்ல.. அந்த வகையில் கிசுகிசுவில் சிக்கிய உச்ச நட்சத்திர ஜோடி என்றால் அது விஜய் – த்ரிஷா தான். விஜய் – த்ரிஷா இடையே ரகசிய உறவு இருப்பதாக கில்லி, ஆதி படங்கள் வெளியான போதே தகவல் பரவியது. அப்போதே விஜய்யும் – த்ரிஷாவும் தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல்கள் நாளடைவில் மங்கிய நிலையில் தற்போது இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. 

கடந்த 22-ம் தேதி விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார் த்ரிஷா. விஜய் உடன் எடுத்துக் கொண்ட போட்டோவுடன் ஆங்கில் பாடல் வரிகளையும் சேர்த்து பதிவிட்டிருந்தார். “ நீ தான் என் காதல்.. சாகும் வரை நீ தான் என் காதல்” என்ற வார்த்தைகள் அதில் இடம்பெற்றிருந்தது.

இது.. அதுல்ல.. சிக்கிய போட்டோஸ்.. புயலை கிளப்பும் த்ரிஷா விவகாரம்.. அப்ப விஜய்யின் அரசியல் வாழ்க்கை?

இந்த வாழ்த்து செய்தி நேற்று புகைச்சலை கிளப்பிய நிலையில் த்ரிஷா, விஜய்யும் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, படப்பிடிப்பு இல்லாத சமயங்கள் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றது போன்ற பல படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

இந்த நிலையில் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக செல்லும் புகைப்படம் இணையத்தில் மீண்டும் வைரலாகி உள்ளது. இந்த போட்டோவை பதிவிட்டுள்ள பயனர் “கமல்ஹாசனைப் பற்றி நான் போற்றும் ஒரு விஷயம் என்னவென்றால், தனது உறவு நிலையைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் துணிச்சல். விவாகரத்தை 4 வருடங்களாக மறைத்த மற்ற சில பெரிய நட்சத்திரங்களைப் போலல்லாமல், இது அவரது ரசிகர்களைப் பாதிக்கும் என்று அவர் பயப்படவில்லை! ஹீரோக்களுக்கு திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் தைரியம் இருக்க வேண்டும்.” என்று பதிவிட்டிருந்தார்.

Scroll to load tweet…

அவரின் இந்த பதிவுக்கு அது விஜய் – த்ரிஷாவின் தனிப்பட்ட விஷயம் என்றும் அதை பற்றி பேச யாருக்கும் தகுதியில்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர். அதே மறுபுறம் விஜய் த்ரிஷாவை ட்ரோல் செய்யும் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

Scroll to load tweet…

விஜய்யையும், எம்.ஜி.ஆரையும் ஒப்பிட்டும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். எம்.ஜி.ஆருக்கு எப்படி ஜெயலலிதாவோ, அதே போல் விஜய்க்கு த்ரிஷா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Scroll to load tweet…

பலரும் த்ரிஷாவும், விஜய்யும் ரிலேஷன்ஷிப்பில் இருக்காங்களா என்று அதிர்ச்சி உடன் பதிவிட்டும் வருகின்றனர்.

Scroll to load tweet…

மேலும் விஜய் – கீர்த்தி சுரேஷ் இடையே இருக்கும் உறவை குறிப்பிட்டு, விஜய்யின் கட்சி பெயர் தமிழக, வெற்றிக் கழகம் இல்லை, த்ரிஷா, விஜய், கீர்த்தி என்றும் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

Scroll to load tweet…

Scroll to load tweet…

Goat Movie: 'கோட்' படத்தில் மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு AI தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டிய யுவன்!