தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பில் படு பிஸியாக நடித்து வருகிறார். மேலும் விஜய்யை பார்ப்பதற்காக, தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தின் அருகே, இவருடைய ரசிகர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தன்னை பார்க்க வந்த ரசிகர்களை ஏமாற்றாமல் விஜய்யும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு கை அசைத்து, ரசிகர்களின் அன்பிற்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில், வழக்கம் போல் நேற்று தன்னுடைய ரசிகர்களை சந்திக்க வெளியே வந்த அவர்... அங்கு கூடி இருந்த கூட்டத்தை பார்த்து, திடீர் என படக்குழு நிறுத்தி வைத்திருந்த வேன் ஒன்றின் மீது ரிக்ஸ்க் எடுத்து ஏறி, அணைத்து ரசிகர்களையும் பார்த்தவாறு கை அசைத்தார்.

ரசிகர்கள் தளபதியை பார்த்து ஆரவாரம் செய்ததால், ரசிகர்களை பார்த்த உற்சாகத்தில்... பாக்கெட்டில் இருந்து தன்னுடைய செல்போனை எடுத்து அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டு, ரசிகர்களுக்கு கை அசைத்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ இதோ...