Asianet News TamilAsianet News Tamil

’தகுதி உள்ளவர்கள்தான் பதவியில் இருக்கவேண்டும்’...ஆட்சியாளர்களுக்கு திகில் கிளப்பும் விஜய்...

அவ்விழாவில் பேசிய  விஜய்,”வாழ்க்கை கூட கால்பந்து விளையாட்டு போலத்தான். நாம் கோல் போட முயற்சிப்போம், அதைத் தடுக்க ஒரு கூட்டமே வரும்.நம்ம கூட இருப்பவனே கூட எதிரணிக்காக கோல் போடுவான். யாருடைய அடையாளத்தையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்குங்கள்.வாழ்க்கையில் அவர்களை மாதிரி வரணும், இவர்களை மாதிரி வரணும் என்று ஆசைப்படாதீர்கள். அதுக்குத் தான் அவர்களே இருக்கிறார்களே. நீங்கள் நீங்களாகவே வளருங்கள்.

actor vijay speech at bigil audio function
Author
Chennai, First Published Sep 20, 2019, 9:51 AM IST

‘சர்க்கார்’படத்தின் மூலம் கிடைத்த கசப்பான அனுபவத்தால் இம்முறை ‘பிகில்’ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் கருத்துக்கள் எதுவும் கூறமாட்டார் என்று ஆருடம் சொல்லப்பட்ட நிலையில் சுபஸ்ரீ விவகாரத்திலும், எதிரியாக இருந்தாலும் மதிக்கக்கற்றுக்கொள்ள வேண்டும் என்று எம்.ஜி.ஆரை மேற்கோள் காட்டியதன் மூலம் ஆளும் அதிமுகவினரை போல்டாக வம்பிழுத்தார் நடிகர் விஜய்.actor vijay speech at bigil audio function

’தெறி’,’மெர்சல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அவ்விழாவில் பேசிய  விஜய்,”வாழ்க்கை கூட கால்பந்து விளையாட்டு போலத்தான். நாம் கோல் போட முயற்சிப்போம், அதைத் தடுக்க ஒரு கூட்டமே வரும்.நம்ம கூட இருப்பவனே கூட எதிரணிக்காக கோல் போடுவான். யாருடைய அடையாளத்தையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்குங்கள்.வாழ்க்கையில் அவர்களை மாதிரி வரணும், இவர்களை மாதிரி வரணும் என்று ஆசைப்படாதீர்கள். அதுக்குத் தான் அவர்களே இருக்கிறார்களே. நீங்கள் நீங்களாகவே வளருங்கள்.

விளையாட்டு மேம்பட வேண்டும் என்றால் அரசியலில் புகுந்து விளையாட்டு பண்ண வேண்டும். ஆனால், விளையாட்டில் அரசியல் பண்ணக்கூடாது. எதை யாரால் முடிக்க முடியும் என்று பார்த்து, அவரை எங்க உட்கார வைக்க வேண்டும் என திறமையை வைத்து முடிவு பண்ணுங்கள்.actor vijay speech at bigil audio function

பேனரால் விழுந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என் ஆறுதல். இது போன்ற சமூகப் பிரச்சினைக்கு ஹாஷ்டேக் போடுங்கள். சமூகப் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள். இங்கு யாரைக் கைது செய்ய வேண்டுமோ, அவர்களை விட்டு விடுகிறார்கள்.லாரி ஓட்டியவர், போஸ்டர் பிரிண்ட் பண்ண கடைக்காரரை எல்லாம் கைது செய்கிறார்கள்.எனது பேனர், கட் அவுட்டை கிழித்த போது ரசிகர்கள் வருத்தப்பட்ட அளவுக்கு நானும் வருத்தப்பட்டேன். என் புகைப்படத்தைக் கிழியுங்கள், உடையுங்கள். ஆனால், என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்.என் ரசிகர்கள் கனவுகள், ஆசைகளுடன் பேனர் வைக்கிறார்கள். அதைக் கிழித்தால் கோபம் வருவது நியாயம் தான். அதற்காக அவர்கள் மீது கை வைக்காதீர்கள். இது என் வேண்டுகோள்.எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். காரில் செல்லும் போது கருணாநிதியை பற்றி தவறாக கூறியவரை இறக்கி விட்டவர் எம்ஜிஆர்.உழைத்தவர்களை மேடையில் ஏற்றிப் பார்க்கும் ரசிகர்கள் தான் முதலாளி’என்றார் விஜய்.

அவரது வீராவேசமான பேச்சுக்கு பல உள்ளர்த்தங்கள் கற்பித்து அவற்றை துண்டு துண்டாக வைரலாக்கி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios