அட்லீ - விஜய் கூட்டணியில் திரைக்கு வந்த "பிகில்" திரைப்படம் ரசிகர்களின் மாஸ் தீபாவளி ட்ரீட்டாக அமைந்தது. இதுவரை "பிகில்" திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய் படத்தின் பல சாதனைகளை இந்தப் படம் முறியடித்து வருகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  "தளபதி 64" படத்தில் விஜய் பிசியாக நடித்து வருகிறார். சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளனர். 

இதுமட்டுமின்றி ஆண்ட்ரியா, ஸ்ரீமன், '96' புகழ் கவுரி கிஷான், 'பவி டீச்சர்' பிரிகிடா, வி.ஜே.ரம்யா, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சேத்தன், சஞ்சீவ், பிரேம் என  நட்சத்திர பட்டாளங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தப் படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்க உள்ளார். படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

"தளபதி 64" படம் குறித்த அப்டேட்டை தெரிந்து கொள்ள ஆரம்பம் முதலே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு, இன்னொரு சர்ப்பிரைஸ் தகவல் கசிந்துள்ளது. அதாவது "தளபதி 64" படத்தில் மாஸ் ஓப்பனிங் பாடல் ஒன்றை தளபதி விஜய் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப்பாடலின் முதல் எழுந்து "சம்பவம்" என ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே பிகில் திரைப்படத்தில் விஜய் பாடிய "வெறித்தனம்" சாங் மிகப்பெரிய ஹிட்டானது. இதனால் விஜய்யின் அடுத்த சம்பவத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.