தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களாக நடித்து வரும், பல பிரபலங்களின் பழைய புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் ஆச்சர்யம் அடைவதுண்டு, அந்த வகையில், பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் பழைய புகைப்படம் ஒன்று, வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில், மணல் மீது ஹாய்யாக படுத்துக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. பேண்ட், ஷர்ட் என மிகவும் சாதாரணமாக தனிமையில் படுத்து கொண்டிருக்கும் இவருடைய புகைப்படம் தற்போது வைரலாகி பரவி வருகிறது.

விஜய் சேதுபதியா என பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது இந்த சிறு வயது புகைப்படம். மேலும் இவரை பார்ப்பவர்கள் எளிதில் கண்டு பிடிப்பதும் சற்று கடினமே...

அன்று ஹாய்யாக படுத்துக்கொண்டு சிறு பிள்ளையாய் காற்று வாங்கிய இவருக்கு தெரிந்திருக்குமோ என்னவோ... தமிழ் சினிமாவில் தானும் ஒரு நிலையான நடிகர்  என்று... விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு என்பது மறுக்கமுடியாத உண்மை.