actor vijay sai sucide
தெலுங்கு திரையுலகில் பிரபல காமெடியன் ஆன விஜய் சாய் நேற்று காலை, ஹைதராபாத்தில் அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தெலுங்கு நடிகர் நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் இவரது தற்கொலைக்கு பண நெருக்கடி என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இவர் தற்கொலைக்கு பதிவு செய்யப் பட்டிருந்த ஒரு வீடியோ ஆதாரத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இதில், தன்னுடைய தற்கொலைக்கு காரணம், தன்னுடைய முன்னாள் மனைவி மற்றும் அவருடைய வழக்கறிஞர் சித்ரா என கூறியுள்ளார். இவர் அவருடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற போதிலும் தொடர்ந்து அவருடைய மனைவி இவரிடம் பணம்... நகை.. ஆகியவற்றைக் கேட்டு மன உளைச்சல் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

ஒரு நிலையில் இவருடைய தொந்தரவும், வழக்கறிஞர் தொந்தரவும் தாங்க முடியாமல்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.
இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும், இவரது காமெடி மிகவும் சிறப்பாகப் பேசப்பட்ட படங்கள் பொம்மரியலு மற்றும் அம்மையிலு அப்பாஜிலு ஆகியவை. இவருடைய மரணம் பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
