அஜீத்,விஜய் ரசிகர்கள் தாங்கள்தான் டாப் என்று காட்டுவதற்காக பண்ணுகிற அட்டகாசங்களுக்கு அளவே இல்லை என்னும் நிலையில், ஈரான் நாட்டு ஜிம் ஒன்றில் பயிற்சியில் ஈடுபடும் மெம்பர்களுக்கு நாள் தோறும் விஜய் படப்பாடல் ஒன்றுதான் ஒலிபரப்பப்படுகிறது என்று சொன்னால் நம்பக் கஷ்டமாக இருக்கிறது அல்லவா?

மோடி சின்ன வயதில் முதலையை வீட்டுக்குக் கொண்டு வந்ததையே நம்புகிற நாம் இதையும் நம்பிவிடலாம் தானே? ஆனால் அஜித் ரசிகர்கள் அப்படி சும்மா வொட்டு விடுவார்களா? ‘போக்கிரி’படத்தில் அசினும் விஜயும் செம குத்து குத்திய ‘மாம்பழமாம் மாம்பழம்’பாடலுக்கு அந்த ஈரான் நாட்டு ஜிம் பயிற்சியாளர்கள் ஆடும் கூத்தை நீங்களும் கொஞ்சம் பார்த்து ரசியுங்கள்... இதோ அந்த வீடியோ...