Asianet News TamilAsianet News Tamil

விஜய் வரி கட்டிட்டாரா? ரசீதை வெளியிட்டு ஹேட்டர்ஸுக்கு ரசிகர்கள் பதிலடி!

நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு சொகுசுக்கு காருக்கு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவை நேற்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
actor vijay paid car tax already? viral receipts
Author
Chennai, First Published Jul 14, 2021, 12:32 PM IST

நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு சொகுசுக்கு காருக்கு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவை நேற்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து , விஜய்க்கு எதிராக சிலர் 'வரி கட்டுங்க விஜய்' போன்ற சில ஹேஷ் டேக்குகளை சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். குறிப்பாக அந்த ஹேஷ் டேக்குகளில் விஜய் தனது ஆடம்பர காருக்கு வரி காட்டாமல், வரி வரிக்கு விலக்கு கேட்பது போன்ற செய்திகள் பரவி வந்தது.

actor vijay paid car tax already? viral receipts

ஆனால்  விஜய் இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்குமதி செய்யும்போது முழு வரியையும் கட்டி விட்டார். அதன் பின்னர் அவர், தான் கட்டிய வரியிலிருந்து வரி விலக்கு கேட்டு தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுதான் தற்போது தீர்ப்பாகி உள்ளது என்பதும், கட்டிய வரிக்கு வரி விளக்கு கேட்டதால் தான் அவருக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார் நீதிபதி என விஜய் ரசிகர்கள் உரிய ஆதாரத்தையும் வெளியிட்டனர்.

actor vijay paid car tax already? viral receipts

இந்நிலையில் தற்போது விஜய் தன்னுடைய சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி கட்டிய ரசீதையும் சிலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, தளபதிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த ஹேட்டர்ஸுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios