விஜய்யின் தாயார் செய்துள்ள செயலுக்கு, தளபதி ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய வரவேற்பை தெரிவித்து வருகிறார்கள். அப்படி என்ன செய்தார் என்பதை பார்க்கலாம் வாங்க. 

தளபதி விஜய் எப்போதுமே அவருடைய அம்மாவின் செல்லம். கடந்த சில வருடங்களாக அவருடைய தந்தை எஸ்.ஏ.சி-யின் மீது சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பேசுவது இல்லை என்றாலும், ஒரு நாளும் தன்னுடைய தாயாரை அவர் விட்டு கொடுத்தது இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய தாயாரை சந்தித்து, அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகள்: கீர்த்திசுரேஷ், சாய் பல்லவி, மோகன்லால், மீரா ஜாஸ்மின் ஆகிய 20 பிரபலங்களின் ஓணம் பண்டிகை செலெப்ரேஷன் போட்டோஸ்.!

அதே போல் தன்னுடைய மகனை சோபாவும் எப்போதும் விட்டு கொடுக்காமல் இருக்கும் அன்புள்ளம் கொண்ட தாய். தற்போது இவர் செய்துள்ள செயலுக்கு தான் விஜய் ரசிகர்கள் தங்களுடைய வரவேற்பை தெரிவித்து வருகிறார்கள். அதாவது, இத்தனை ஆண்டுகள் எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லாமல் இருந்த ஷோபா, தற்போது முதல் முறையாக ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார். அதுவும் தன்னுடைய முதல் பதிவு, மகனை குறிப்பிட்டு தான் போட்டுள்ளார். இதற்க்கு தான் விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வரவேற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: 40 வயதில்.. ஹீரோயின்களுக்கு நிகராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடத்திய போட்டோ ஷூட்! மாடர்ன் உடையில் மிரள வைத்த போஸ்!

தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, டுவிட்டரில் இணைந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், எனது அன்பு மகனின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளது மேலும் மகிழ்ச்சி ஷோபா தனது டிவிட்டில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது விஜய் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருவதோடு, பலர் தளபதியின் தாயார் ஷோபாவை ட்விட்டரில் பின்தொடர துவங்கியுள்ளனர். இவர் ட்விட்டர் பக்கத்தில் இணைந்த 10 மணிநேரத்தில் சுமார், மூன்றாயிரம் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…