கடந்த சில வருடங்களாகவே, விஜய் அரசியல் நோக்கத்துடன், ஆடியோ லான்ச் விழாக்களில் பேசி வருவது நாம் அறிந்தது தான். ஆனால் சமீபத்தில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

மேலும் இந்த கட்சியில் தலைவர், பொருளாளர் என பொறுப்பில் இருந்த ஒவ்வொருவரும் விலகினார்கள். மேலும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும்  எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.

அதே போல் விஜய் தரப்பில் இருந்து தன்னுடைய ரசிகர்கள் தந்தையின் கட்சியில் சேர வேண்டாம் என்றும் தன்னுடைய அறிக்கையில் கூறி இருந்தார் தளபதி. இந்நிலையில் விஜய்  கட்சி துவங்குவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் இதனால் அதிருப்தியில் இருந்த நிலையில், விஜய் அதிருப்தியில் உள்ள நிலையில் தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளையும், ரசிகர்களையும் பனையூரில் உள்ள வீட்டில் உள்ள அலுவலகத்தில், காணொளியில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது நீங்கள் நினைப்பது போல் அனைத்தும் விரைவில் நடைபெறும், என ரசிகர்களிடம் விஜய் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் யாரும் மாற்று கட்சியில் சேர வேண்டாம் என, நிர்வாகிகளை விஜய் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.