இன்று காலை தளபதி 63 படப்பிடிப்பில் 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் எலக்ட்ரீசியன் ஒருவர் படுகாயமடைந்தார். இவரை தளபதி விஜய், மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அட்லீ, இளைய தளபதி விஜய்யை வைத்து மூன்றாவது முறையாக இயக்கி வரும் திரைப்படம், தளபதி 63 . இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள EVP ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

 

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற படப்பிடிப்பின் போது100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. ஃபோக்கஸ் லைட் தவறி விழுந்த  விபத்தில்  கீழே நின்று கொண்டிருந்த மின் பணியாளர் செல்வராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார்.


 
உடனடியாக படக்குழுவினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வராஜின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய்  நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். இதுகுறித்த புகைப்படங்கள்  சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.