தமிழில் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் காமெடியனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தி வருபவர் நடிகர் ஸ்ரீமன், இந்நிலையில் விஜய்யின் கியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஈர்த்து, வைரலாகி வருகிறது.

நடிகர் ஸ்ரீமன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஜய்யுடன், ஃபிரெண்ட்ஸ், போக்கிரி, மாஸ்டர் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால், சக நடிகர்கள் என்பதை தாண்டி நட்பு ரீதியிலும் இருவரும் பழகி வருகிறார்கள்.

அந்த வகையில், தற்போது விஜய்யின் கியூட் வீடியோ ஒன்றை ஸ்ரீமன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, நீ வேற லெவல் நண்பா என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தன்னுடைய நண்பர் வைத்திருந்ததாகவும், இதனை பார்த்த போது பாசிட்டிவ் எண்ணம் தான் தனக்கு தோன்றியதாக கூறியுள்ளார். 

அதே நேரத்தில் இன்று 6 மணிக்கு, பிரபல பாடகர் எஸ்.பி.பி. விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு நல்ல படியாக வரவேண்டும் என கூட்டு பிராத்தனை செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மெசேஜுடன், ஸ்ரீமன் வெளியிட்டுள்ள விஜய்யின் வீடியோ வைரலாகி வருகிறது.