சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அவரிடம் விசாரித்து வரும் நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர் .இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாஸ்டர் ,  இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது  நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   இதற்கிடையில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இதனையடுத்து விசாரணைக்காக நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார், அவரது இல்லத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில்  விஜய் வீட்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும்,   சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு  அவர் வழியைப் செய்ததாகவும் தகவல் வெளியானது, ஆனால்  விஜய் வீட்டில் இரண்டு நாட்கள் நடந்த வருமான வரித்துறை சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப் படவில்லை  அவர் வருமான வரி கணக்குகளை சரியாக வைத்திருப்பதாகவும் மற்றொருபுறம் செய்தி வெளியானது .  இந்நிலையில்  படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினார் இதனால் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது . இதனை அடுத்து பலர் விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர் . 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு உள்ளது என அவரது ரசிகர்கள்  விமர்சித்து வருகின்றனர்.   அரசியலை சினிமாவுடன் கலக்க வேண்டாம் என இயக்குனர் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளதுடன்,   விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார் ,  நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி விஜய் விசாரணை வளையத்தில் இருந்து வரும் நிலையில் , மிகுந்த கொந்தளிப்பில் உள்ள  விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக காத்திருக்கின்றனர்,  பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசி விஜய் அதிரடி காட்டிய நிலையில் மாஸ்டர் பட இசை வெளியீட்டிலும் அவர் அரசியல் பேசுவார் , அரசியல் கட்சி குறித்து அறிவிப்புகள் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் .