actor vijay did this for his favourite actor vijayakanth
நடிகர் விஜய் சிறுவயதிலேயே தனது திரையுலக பயணத்தை தொடங்கிவிட்டார். அவர் அறிமுகமானது கூட நடிகர் விஜயகாந்தின் படத்தில் தான். இந்த சம்பவம் குறித்து ஒரு பேட்டியின் போது விஜய் கூறுகையில், ’நான் விஜயகாந்த் ரசிகன், பள்ளிக்கு லீவ் எடுத்துவிட்டு, அவர் படத்தை பார்ப்பதற்காக திருட்டுத்தனமாக கூட சென்றிருக்கிறேன்’ என்று அவரே கூறி இருக்கிறார்.

நடிகர் விஜயகாந்த் இப்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால், திரைப்படங்களில் அவரை அதிகம் காண முடிவதில்லை. ஆனால் அவரது மகன் சண்முக பாண்டியன், தற்போது சினிமாக்களில் நடித்து வருகிறார். ஆனால் அவர் இன்னும் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை.

சமீபத்தில் கூட அவர் நடித்த ”மதுர வீரன்” திரைப்படம் திரைக்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை அப்படம். இதனை தொடர்ந்து விஜயகாந்த் மீது அளவு கடந்த பாசமும், மரியாதையும், வைத்திருக்கும் தளபதி விஜய், அவரிடம் நான் உங்கள் மகனை வைத்து என் சொந்த தயாரிப்பில் படம் எடுக்கிறேன். என வாக்கு கொடுத்திருக்கிறாராம்.

இதனை தொடர்ந்து சண்முகப்பாண்டியனுக்காக, பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டுவருகிறாராம் விஜய். அவருக்கு தான் என நினைத்து ஆவலுடன் கதை சொல்ல வந்த இயக்குனர்கள் பலரும், விஜய்க்காக அவர் கதை கேட்கவில்லை என தெரிந்ததும் பின்வாங்கி இருக்கின்றனர். எப்படியும் விரைவில் கதை கிளிக் ஆன உடன், படத்தை தொடங்க வேண்டும். என்ற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம் விஜய்.
