Vijay Dance : பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து நடிகர் விஜய் வாத்தி கம்மிங் டான்ஸ் ஆடியுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

நடிகர் விஜய்யின் நடனத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர். அவர்களை கவரும் விதமாக ஒவ்வொரு படத்திலும் இவர் ஆடும் நடனத்திற்கு வேறலெவல் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த பாடல் வீடியோக்கள் குழந்தைகளை கவரும்படி உள்ளதால் அவை யூடியூபில் பல நூறு மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெறும் அரபிக் குத்து பாடல் வெளியானது முதலே உலகளவில் வைரல் ஹிட் ஆனது. அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்த இப்பாடலுக்கு விஜய் போடும் துள்ளல் நடனம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளன.

View post on Instagram

இதற்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் பாடல்களும் அமோக வரவேற்பை பெற்றன. குறிப்பாக அதில் வரும் வாத்தி கம்மிங் பாடலில் இடம்பெறும் நடிகர் விஜய்யின் நடனம் மிகவும் பேமஸ் ஆனது. அந்த பாடல் வெளியாகி 2 ஆண்டுகள் ஆனாலும் அதற்கான மவுசு இன்னும் குறைந்தபாடில்லை என்றே சொல்லலாம்.

அந்த வகையில் தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து நடிகர் விஜய் வாத்தி கம்மிங் டான்ஸ் ஆடியுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள டான்ஸ் மாஸ்டர் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... sivakarthikeyan : பூர்வீக கிராமத்தில் அழகான புதுவீடு கட்டிய சிவகார்த்திகேயன்... வைரலாகும் போட்டோஸ்