தீபாவளி தினம் அன்று, நடிகர் விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வெளியானதால். அதே தினத்தில் வெளியாக இருந்த சிறு பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காமல் போனது. இதனால் எதிர்பாராத விதமாக தீபாவளி அன்று வெளியாக இருந்த படங்களின் வெளியீடு தள்ளிப்போனது. 

அப்படி திரையரங்கம் கிடைக்காமல் போன படங்களில்... பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் திமிர் பிடித்தவன் படமும் ஒன்று. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் இந்த வாரம் என அறிவிக்கப்பட்டது. 

ஆனால் இந்த வாரம் காற்றின் மொழி, உத்தரவு மகாராஜா, செய், சித்திரம் பேசுதடி 2 , ஆகிய படங்கள் வெளியாக உள்ளதால்... திமிர் பிடித்தவன் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என கூறிவருகின்றனர். இதனால் இந்த வாரமும் திட்டமிட்டபடி... ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பிரச்சனையால் மிகவும் டென்ஷன் ஆன, நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி பார்த்திமா... இந்த பிரச்சனைக்கு முழு காரணம் விஜய் தான் என்பது போல் ட்விட் போட்டுள்ளார். 

இது குறித்து அவர் கூறியுள்ளது, விஜய்யின் 'சர்கார்' படமே தமிழ் நாட்டில் மட்டும் 800 திரையரங்குகளுக்கு மேல் ஆக்கிரமித்துவிட்டது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி வாங்கிய பின்பும் எங்களால் குறித்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என தன்னுடைய தரப்பில் உள்ள நியாயத்தை கூறி திட்டி தீர்த்துள்ளார். 

அந்த பதிவு இதோ:

Scroll to load tweet…