நடிகை ஸ்ரீ தேவி நடிக்க துவங்கிய காலத்தில் இருந்து முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர் - சிவாஜி ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாகவும், ரஜினி - கமல், ஆகியோருடன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். 

அதே போல் கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரத்தைக் கொண்ட விஜயுடன் குணசித்திர வேடத்தில் புலி படத்திலும்... நடிகை ஸ்ரீ தேவி ரீஎன்ட்ரிக் கொடுத்த இங்கிலீஷ் விங்லீஷ் படத்தில் சிறப்பு கதாப்பதிரத்தில் அஜித் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து திரையுலகினர் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள ஸ்ரீ தேவியின் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் சமூக வலைத்தளத்தில் கூட இதுவரை தங்களுடைய இரங்கலை தெரிவிக்கவில்லை. 

விஜய் - அஜித் இருவரும் சமூக வலைதளத்தின் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவிக்காவிட்டாலும் நேரடியாக மும்பை சென்று ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் நேற்றே மும்பைக்கு சென்றுவிட்டதாகவும் இறுதிச்சடங்கு முடியும் வரை இவர்கள் மும்பையில் இருக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அதே போல் விஜயும் மும்பைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.