பிரபல நடிகர், விக்னேஷ் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, பசி பட்டினியோடு இருக்கும், நலிந்த கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள், தன்னுடைய ஓட்டலுக்கு வந்து சாப்பிடுமாறு, அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விக்னேஷ்:

தமிழில் 1992 ஆம் ஆண்டு 'சின்ன தாயே' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ். இதை தொடர்நது, அம்மா பொண்ணு, கிழக்கு சீமையிலே, உழவன், என பல படங்களில் நடித்தார்.

இதுவரை 30 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருந்தாலும், மீண்டும் தன்னை ஒரு கதாநாயகனாக நிலைநிறுத்திக்கொள்ள போராடி வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக இவர் ஹீரோவாக நடித்த 'அவன் அவள்'மற்றும் 'ஆருத்ரா' ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது.

நடிகர் என்பதையும் தாண்டு, தொழிலதிபராக இருக்கும் இவர், தற்போது படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதால், கஷ்டப்பட்டு வரும் கலைஞர்கள் ஒருவேளையாவது வயிறார உணவு அருந்த வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வரும் கலைஞர்கள், ஈக்காட்டுதாங்களில் உள்ள தனக்கு சொந்தமான ஓட்டல் 'சேலம் ஆர் ஆர் பிரியாணியில்' மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இலவசமாக சாப்பிட்டு செல்லலாம் என கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதன் மூலம், சாப்பிட எங்கு செல்வது என திணறி கொண்டிருக்கும் துணை இயக்குனர்கள், நலிந்த நடிகர்கள், மற்றும் பலர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.