actor vasanth ravi new year wish

முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பால் அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைத்தவர் தரமணி படத்தின் நாயகன் 'வசந்த் ரவி'. இந்த படத்தை தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய முதல் படத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ரசிகர்களுக்கு நன்றி கடிதம் எழுதியுள்ளார். அதில்' நான் கதையின் நாயகனாக அறிமுகமான "தரமணி" படத்திற்கு தாங்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி.

தரமணி படத்தில் எனது நடிப்பை பாராட்டி முதல் படத்திலேயே ஒரு நல்ல நடிகனாக வலம் வரும் அனைத்து தகுதியும் உள்ளது என நீங்கள் கூறிய வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியும் மேலும் மேலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்த கதாபத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது. பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களின் இத்தகைய ஆதரவு எனது கலைப்பயணத்திற்கு ஊன்று கோளாக அமையும் என்பதை உளமாற நம்புகிறேன்.

என் சினிமா அறிமுகத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்த இயக்குனர் ராம், தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமார், உடன் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நலவாழ்த்துக்கள்.