தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதும், உயிர் சேதங்கள் குறைவாவே இருந்த நிலையில்... கடந்த சில தினங்களாக கொரோனாவால் உயிர் இழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மேலும் செய்திகள்: இதயத்தை உலுக்கும் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் இறுதி ஊர்வலம்...! கண்ணீர் விட்டு கதறிய ஆக்ஷன் கிங் அர்ஜுன்!
 

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என, மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் சமூக இடைவெளியை பின் பற்றி செய்யக்கூடிய வேலைகளுக்கு மட்டும் மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் வரதராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதில், கொரோனா பாதிப்புடன் சென்னையில் உள்ள மருத்துவ மனைகளுக்கு சென்றால், சிகிச்சை அளிக்க மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்:5 வருடத்திற்கு பின் 'என்னை அறிந்தால்' படத்தில் இருந்து வெளியான யாரும் பார்த்திடாத தல அஜித்தின் போட்டோஸ்!
 

நடிகர் வரதராஜனின் நண்பர் ஒருவருக்கு இரண்டு நாட்கள் தொடர்ந்து, காச்சல் இருந்ததாகவும்... மூன்றாவது நாள் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி என்பதால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முற்பட்டபோது, பெட் இல்லை என கூறி சிகிச்சையளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் நிறுவனர், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலருடன் பேசிய பின்னரும் கூட தன்னுடைய நண்பருக்கு யாரும் உதவ முன் வரவில்லை என தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றும் அவருக்கு ஒரு பெட் கூட கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள நடிகர் வரதராஜன்... நமக்கு கொரோனா வராது என்று அனாவசியமாக வெளியில் செல்ல வேண்டாம் என்றும், இது உங்களை விட உங்களுடைய குடும்பத்தினரை அதிகம் பாதிக்கும் என கேட்டுக்கொண்டுள்ளார்.