Asianet News TamilAsianet News Tamil

வடிவேலு போட்ட பக்கா பிளான்... இந்த முறை நடிகர் அல்ல!! வேற லெவலில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வைகை புயல்!!

வைகை புயல் வடிவேலு... விரைவில் ஓடிடி தளத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வேறு லெவல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 

actor vadivelu turn to anchor ott platform
Author
Chennai, First Published Aug 6, 2021, 7:00 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

வைகை புயல் வடிவேலு... விரைவில் ஓடிடி தளத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வேறு லெவல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

80 தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கிய வடிவேலு, மெல்ல மெல்ல தன்னுடைய திறமையாலும் தனித்துவமான காமெடியாலும் என்றும் மக்கள் மனதில் இருந்து நீங்க முடியாத இடத்தை பிடித்து, காமெடி அரசனாக வலம் வந்தார். ஹீரோவை புக் பண்ணுவதற்கு முன்பாக இவருடைய கால் ஷீட்டுக்கு வரிசையில் நின்ற தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கூட உண்டு. அதே போல் சில முன்னணி ஹீரோக்களே வடிவேலு தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என கூறி அவரிடம் பேசி கால் சீட் வாங்கியுள்ளனர்.

actor vadivelu turn to anchor ott platform

இப்படி தமிழ் திரையுலகில், தன்னிகரற்ற இடத்தில் இருந்த வைகைப் புயல் வடிவேலு,  சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் உள்ளார். அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டினாலும் இதுவரை அவரால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு “எனக்கு நடிக்க ஆசையாக இருக்கிறது என்றும் உடலிலும் தெம்பு இருக்கிறது என்றும் ஆனால் யாரும் தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றும் கூறினார். மேலும் நீங்கள் அனைவரும் ஒரு வருடமாகத் தான் லாக்டவுனில் இருக்கிறீர்கள், ஆனால் நான் பத்து வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன்” கண் கலங்கியது ரசிகர்களை கதிகலங்க வைத்தது. 

actor vadivelu turn to anchor ott platform

வைகைப் புயல் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியையும், புகழையும் உருவாக்கி கொடுத்தது ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ திரைப்படம். முதல் பாகத்திற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து,  இம்சை அரசன் 24ம் புலிகேசி பட வேலை தொடங்கப்பட்டது. 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இயக்குநர் சிம்புதேவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வடிவேலு படத்திலிருந்து விலகினார். 

actor vadivelu turn to anchor ott platform

கோடிகளைக் கொட்டி செட் அமைத்து, படப்பிடிப்பை தயாரித்து வந்த ஷங்கர் இதனால் கடும் அதிருப்தி அடைந்தார். வடிவேலு திரும்ப நடிக்க வரவேண்டும், இல்லையெல் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு நஷ்ட ஈடு தர வேண்டுமென தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். ஆனால் வடிவேலு இதற்கெல்லாம் மசியவில்லை. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்த தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு போட்டது. 

இந்நிலையில் இம்சை அரசன் பிரச்சனையை தீர்த்து வைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இறங்கினார்.  வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையேயான பிரச்சனையை பேசித் தீர்க்க முயன்று வந்தார். கடந்த ஆண்டு எப்படியுமே இருவரும் சுமூக உடன்பாடு ஏற்பட்டு, இம்சை அரசன் 24ம் புலிகேசி பட ஷூட்டிங்கை விரைவாக தொடங்கிவிடுவார் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

actor vadivelu turn to anchor ott platform

ஆனால் இன்னும் ரசிகர்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. வடிவேலு எப்போது நடிப்பார் என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், வடிவேலு ஓடிடி தளம் ஒன்றில் வெப் சீரிஸில் நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள புது தகவலில் பெயரில், தெலுங்கில் பல நிகழ்ச்சிகளை ஓடிடியில் வெற்றிகரமாக ஒளிபரப்பி வரும்... ஆஹா என்கிற ஓடிடி தளம் விரைவில் தமிழிலும் ஒரு தளத்தை உருவாக முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக சில முன்னணி நடிகர்களை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

actor vadivelu turn to anchor ott platform

அந்த வகையில் ஒரு காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதற்கு வடிவேலுவை அணுகி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என கூறப்படுகிறது. நடிகராக மட்டும் இன்று தற்போது தன்னுடைய காமெடி பேச்சால் ஒரு தொகுப்பாளராக வேற லெவலில் பிளான் பண்ணி இந்த நிகழ்ச்சியில் இறங்குகிறார் வைகைப்புயல்... இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ரசிகர்களுக்கு காமெடி சரவெடி தான்.

Follow Us:
Download App:
  • android
  • ios