உலகத்தையே சிரிக்க வைத்த வடிவேலுக்கு இப்படி ஒரு சோகமா.? மனக்கசப்பை மனம் விட்டு பேசிய நெகிழ்ச்சி..! 

நடிகர் வடிவேலுவின் அடுத்த படம் எப்போது வெளிவரும் என்ற ஆவலை எல்லாம் தாண்டி தினந்தோறும் மீம்ஸ் மூலமாகவே பட்டி தொட்டி எங்கும் அனைத்து மக்களையும் சென்று அடைந்து விடுகிறார் நடிகர் வடிவேலு. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இதனையும் தாண்டி #prayfornesamani என்ற ஹேஸ்டேக் மூலமாக கடந்த 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

அதன்பின் நடிகர் வடிவேலிடம் போனிலும் நேரிலும் சென்று போட்டி போட்டுக்கொண்டு பேட்டி எடுக்க பல மீடியாக்கள் தயாராகினர். இந்த நிலையில் ஒரு சிறப்பு பேட்டியின்போது பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார் வடிவேலு.

அப்போது, "சில நடிகர்களுக்கு இயல்பாக பழகுவது என்பது பிடிக்காத ஒரு விஷயமாக இருக்கும்.அது போல தான் ஒரு முன்னணி நடிகருடன் நடித்தபோது வாடா போடா என நான் சாதாரணமாக அழைத்தேன்.. அதற்காக பெரும் பிரச்சனையை செய்துவிட்டார்" என அந்த முன்னணி நடிகர் யார் என குறிப்பிடாமல் தெரிவித்து இருந்தார்

அந்த முன்னணி நடிகர் யார் என வடிவேலு தெரிவிக்கவில்லை என்றாலும் ராஜா திரைப்பட படப்பிடிப்பின்போது நடிகர் அஜித் உடன் ஏற்பட்ட சம்பவம்தான் இது என பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ராஜா திரைப்படத்திற்குப் பின் நடிகர் அஜித்தும் வடிவேலும் இணைந்து வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.