அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் நீண்ட ரெஸ்ட் எடுத்து வந்த வைகைப்புயல் வடிவேலு நேற்று நடந்த கருணாநிதி சில திறப்புவிழாவில் உற்சாகமாகக் கலந்துகொண்டார்.

2010ல் நடிகர் விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதலை ஒட்டி தி.மு.கவுடன் இணக்கம் காட்டத்துவங்கிய வடிவேலு 2011 தேர்தலில் முழுவீச்சாக தேர்தல் பிரச்சாரமும் மேற்கொண்டார். சினிமாவில் எடுபட்ட அவரது நகைச்சுவை அரசியலில் சற்றும் எடுபடவில்லை. அப்பிரச்சாரத்துக்குப் பிறகு தற்செயலாக வடிவேலுவின் சினிமா மார்க்கெட் டல்லடிக்கத் தொடங்கியது.

தனது அரசியல் எண்ட்ரியை மக்கள் விரும்பவில்லை என்று புரிந்துகொண்ட வடிவேலு, அடுத்து அரசியல் தொடர்பான அனைத்தையும் உதறித்தள்ளி ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று கருணாநிதி சிலை திறப்புக்கு திடீரென அவர் விசிட் அடித்ததும் உற்சாக சிரிப்புடன் அவரை வரவேற்றனர். அவரும் வரிசையாக ஒவ்வொரு தலைவராக சந்தித்து கும்பிடு போட்டபடியே போய்க்கொண்டிருந்தார். அப்போது அவரை மடக்கி நிறுத்திய வைகோ, ‘எங்களுக்கு அரசியல்ல இருக்குற எல்லா டென்சன்ல இருந்தும் தினமும் உன் காமெடி தான்யா காப்பாத்துது. நீ நல்லா இருக்கணும்’ என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.