ஹிந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு, இயக்குனர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'Article 15 '. ஆயுஷ்மான் குரானை நாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படம் குறைந்த அளவிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய லாபம் பார்த்தது. தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், இதில் ஹீரோவாக உதயநிதி நடிக்கிறார்.

சட்டப்பேரவை தேர்தல்  ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. தேர்தல் முடிந்த நிலையில், சில தினங்கள் ஓய்வில் இருந்த உதயநிதி மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

 

அந்த வகையில், பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற “Article 15” படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், இன்று கலந்து கொண்டார். படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த படத்தை, கனா படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி கொடுத்த, பாடகரும், நடிகருமான... அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார். Zee Studios மற்றும் போனி கபூரின் Bayview Projects வழங்க Romeo Pictures சார்பாக ராகுல் இந்த படத்தை தயாரிக்க உள்ளார் தயாரிக்கும்  M. செண்பகமூர்த்தி இணை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.