தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால், நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் நடிப்பதற்காக, உதயநிதியின் படத்தை உதறி தள்ளிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை காஜல் அகர்வால் நடிப்பில், கடைசியாக 'கோமாளி' திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் இந்தியன் 2 உட்பட மூன்று படங்களும், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்களும், இவரின் கைவசம் உள்ளன.

 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

அதே போல் இவர் நடித்து முடித்துள்ள, 'பாரிஸ் பாரிஸ்' படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் உள்ளது.ஊரடங்கு முடிந்ததும், இவரின் படப்பிடிப்பு பணிகள், அடுத்தடுத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுதுகிறது.இந்நிலையில் தற்போது, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் படத்தில் நடிப்பதற்காக, பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி படத்தில் இருந்து காஜல் விலகியுள்ளார்.

இதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...!

நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக, 'ஆச்சார்யா' என்கிற படத்தில், திரிஷா நடிக்க இருந்தது. பின் ஏதோ காரணத்திற்காக அவர் அந்த படத்தில் இருந்து விலகினார். இதனால் இந்த வாய்ப்பு நடிகை காஜலுக்கு சென்றது.பெரிய நடிகர்கள் படம் என்றால் உடனே ஓகே சொல்லும் காஜல், உதயநிதியின் படத்திற்கு டாட்டா காட்டிவிட்டார். உதயநிதியின் படத்தில் நடிக்கவும் காஜலுக்கு ஜோடிகளில் சம்பளம் பேசியுள்ளனர். முதலில் ஓ.கே. சொல்லி அட்வன்ஸ் வாங்கிய காஜல் அகர்வால். எவ்வித அக்ரிமெண்டிலும் கையெழுத்து போடவில்லையாம். 

இதையும் படிங்க: குடும்ப குத்துவிளக்கு நிவேதா பெத்துராஜா இது?.... அப்பட்டமாக முன்னழகை காட்டி அட்ராசிட்டி...!

அந்த சமயத்தில் சிரஞ்சீவி பட வாய்ப்பு கிடைத்ததும், உதய நிதி படத்தில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டாராம். இதே போல் ஏற்கனவே, 'நண்பேன்டா' படத்தில் காஜல் கமிட் ஆகி, பின் மற்றொரு பெரிய நடிகர் படத்தில் நடிப்பதற்காக, இந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. என்ன தான் காஜல் அகர்வால் கால்ஷீட் இல்லை என்று ஒதுங்க பார்த்தாலும் உதய நிதி விடுவதாக இல்லையாம். ஏற்கனவே ஒரு கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருந்த நிலையில், இன்னும் சில லட்சங்களை கொடுத்து எப்படியாவது காஜலையே கமிட் செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.