நடிகர் டி.பி.கஜேந்திரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், அவரே அதுகுறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழில் எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் டி.பி.கஜேந்திரன். ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கு நேற்று முன்தினம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
"
இந்நிலையில், இதுகுறித்து நடிகரும், இயக்குனருமான டி.பி.கஜேந்திரன் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் பேசுகையில், “எனக்கு கொரோனாவும் இல்ல....கரோனாவும் இல்ல, அது வெறும் புரளி. என் உடல்நலம் நலமாக இருக்கிறது. நீங்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கனும், பட வாய்ப்புகள் வரனும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
