Me Too – வில் அடுத்த அதிரடி !! நடிகர் தியாகராஜன் மீது இளம் பெண் புகார் !! நள்ளிரவில் ரூம் கதவைத்தட்டி தொல்லை ….

நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கிய பொன்னர் சங்கர் படப்பிடிப்பின்போது அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அந்தப் படத்துக்கு போட்டோ கிராபராக பணியாற்றிய இளம் பெண் ஒருவர் சமூக  வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

actor thiyagarajan womwn harressment

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான பொன்னர் – சங்கர் திரைப்படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்தார். அவரது தந்தையும், நடிகருமான தியாகராஜன் அந்த திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தனக்கு இயக்குனர் தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் தனது சமுக வலைத்தளத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.
 

actor thiyagarajan womwn harressment
'பொன்னர் சங்கர்' படத்தில் தான் போட்டோகிராபராக பணிபுரிந்ததாக கூறும் பிரித்திகா மேனன் என்ற அந்த இளம்பெண் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 'மீடூ' ஹேஷ்டேக்கில் பதிவு செய்துள்ளார்.

தாய்லாந்து நாட்டின் அழகிய பெண்கள் தனக்கு மசாஜ் செய்ததாக கூறி அதன் புகைப்படங்களை தன்னிடம் அவர் காட்டியதாகவும், அந்த பெண்களுடன் தான் உல்லாசமாக இருந்ததாக அவர் தன்னிடம் கூறியதாகவும்பிரித்திகா மேனன் தெரிவித்துள்ளார். அவர் அப்படி சொல்லும்போது  தனக்கு உடம்பெல்லாம் கூசியதாகவும் கூறியிள்ளார்.

மேலும் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து நள்ளிரவில் வந்து கதவை தட்டியதாகவும் இதனால் தான் இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் இருந்ததாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

actor thiyagarajan womwn harressment

நேற்று நடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஒருவர் பாலியல் பிகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தியாகராஜன். மீடூ ஹேஷ்டேக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios