கமலின் ‘விருமாண்டி’ ரஜினியின் ‘பேட்ட’படங்களில் நடித்த பிரபல வில்லன் நடிகர் தென்னவன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 52.

1990ம் ஆண்டு பாரதிராஜாவின் ‘என் உயிர்த் தோழன்’படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தென்னவன். அடுத்து விக்ரம் சரண் கூட்டணியின் ‘ஜெமினி’படத்தின் மூலம் புகழ் பெற்ற அவர் தொடர்ந்து வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். விருமாண்டி, சண்டக்கோழி,பேட்ட,கத்திச்சண்ட, ஜிகிர்தண்டா உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பட்டுள்ள அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.