விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர், நடிகரும், தொகுப்பாளருமான தாடி பாலாஜி. இவருக்கும் இவருடைய மனைவி நித்தியாவிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளது.

இருவருக்கும் இதுவரை விவாகரத்து ஆகவில்லை என்றாலும், நித்யா தாடி பாலாஜியிடம் இருந்து விலகி வாழ்வதையே விரும்புவதாக வெளிப்படையாகவே தெரிவித்தார்.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், தன்னுடைய மனைவி நித்யாவை சமாதான படுத்துவதற்காக தாடி பாலாஜியும் கலந்து கொண்டார். ஆனால் முதலில் சமரசம் ஆவது போல், தெரிந்தாலும், பிறகு அதுவும் பிரச்சனையில் தான் முடிந்தது. எனவே இப்போது வரை இருவருமே தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் இவர் நடத்தி வந்த நிகழ்ச்சிகளும், ஊரடங்கு உத்தரவின் காரணமாக முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது இவர் மட்டுமே தனியாக வசித்து வருகிறாராம்.

கண்டு களிக்க தொலைக்காட்சி, யாரிடம் வேண்டுமானாலும் பேச போன் என எல்லாம் இருந்தும், குடும்பம் என்கிற ஒன்று இல்லாததன் அருமையை கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கு உணர்த்தி விட்டதாகவும் தனி ஆளாய் நின்று கலங்குவதாகவும் பிரபல நாளிதழ் ஒன்றில் கூறியுள்ளார் தாடி பாலாஜி.