Asianet News TamilAsianet News Tamil

ரஜினியை உயரமாக தூக்கி கீழே போட்ட டி.ஆர்...!! எப்படி சார் உங்களால மட்டும் சிரிக்காம நக்கல் பண்ண முடியுது...!!

பாகுபலி என்ற படம் பிரமாண்ட வெற்றி பெற்றது அந்த படத்தின் டிக்கெட 50 , 100 கொடுத்துதான்  மக்கள் படத்தைப் பார்த்தனர் . யாரும் ஆயிரம் ரூபாய்கெகொல்லாம் வாங்கவில்லை 

actor t rajendar criticized actor rajinikanth  regarding dharbar ticket sale
Author
Chennai, First Published Jan 4, 2020, 5:18 PM IST

பாகுபலி வசூலிக்கும் போது தர்பார் வசூலிக்காதா என   நடிகர் டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பி உள்ளார்,  தர்பார் பட டிக்கெட் விலை ஏற்றம் தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் இவ்வாறு அளித்த பதிலால் பரபரப்பு ஏற்பட்டது.   சென்னை ,  காஞ்சிபுரம் ,  திருவள்ளூர்  மாவட்ட பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் டிராஜேந்தர் வெற்றி பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,  பல்வேறு  கேள்விகளுக்கு  அவரது பாணியில்  சூடாகவும் சுவையாகவும் பதில் அளித்தார். 

actor t rajendar criticized actor rajinikanth  regarding dharbar ticket sale

அப்போது அவரிடம் தர்பார் பட டிக்கெட் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர் அப்போது பேசிய அவர் ,  " இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாது ஆனால் கருத்து சொல்கிறேன்  அதிலிருந்து நீங்களே பதிலை கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்"  பாகுபலி என்ற படம் பிரமாண்ட வெற்றி பெற்றது அந்த படத்தின் டிக்கெட 50 , 100 கொடுத்துதான்  மக்கள் படத்தைப் பார்த்தனர் .  யாரும் ஆயிரம் ரூபாய்கெகொல்லாம் வாங்கவில்லை ,  ஆனால் பல கோடி வசூல் சாதனை புரிந்தது,  ஒரு படம் எந்த மொழியில்  எடுக்கப்படுகிறது என்று என்பது முக்கியமல்ல அதிலுள்ள பிரம்மாண்டம்தான் காரணம் என்றார். 

actor t rajendar criticized actor rajinikanth  regarding dharbar ticket sale

ரஜினி சார் ஒரு சூப்பர்ஸ்டார் அந்த இடத்திற்கு வர அவர் எவ்வளவோ கஷ்டப்பட்டு உள்ளார் , கமல் ,  அஜித் ,  விஜய் ,  என எல்லோருமே அப்படித்தான் இவர்களுடைய படத்துக்கும் மற்ற நடிகர்கள் படத்துக்கும் ஒரே டிக்கெட் விலையை கொடுங்கள் என்றால் மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் .  இதுவரை தர்பார் இரண்டு திரையரங்குகளில் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது ,  அதற்குள்ளாக 1500 க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என்று எப்படி சொல்கிறீர்கள் அந்த படத்தின் வியாபாரம் இன்னும் முடியவில்லை என்றார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios