படிப்போரின் கண்களை கலங்க வைக்கும் அளவிற்கு உருக்கமாக உள்ளது. அதை படிக்கும் போது சுஷாந்த் ஏதோ பிரச்சனையில் இருந்திருக்கிறார் என்பதை யூகிக்க முடிகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறான MS Dhoni untold Story என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியாவின் பட்டி, தொட்டி எல்லாம் புகழ் பெற்றவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 34 வயதான இவர் மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சுஷாந்த் கடைசியாக நடித்துள்ள Chhichhore படம் தற்கொலைக்கு எதிராக போராடி வெல்வது பற்றியது. இப்படிப்பட்ட படத்தில் நடித்து ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லாக்டவுனால் வீட்டில் தனிமையில் இருந்த சுஷாந்த் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 34 வயதே ஆன சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையினர், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது வலி மிகுந்த பதிவுகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். சுஷாந்த் சிங் தற்கொலை குறித்த கடிதம் எதுவும் சிக்காத நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். 


பீகாரை பூர்விகமாக கொண்டவர் நடிகர் சுஷாந்த் சிங். இவரது தாயார் கடந்த 2002ஆம் மரணமடைந்தார். இதனால் சுஷாந்த் சிங் மிகவும் மனமுடைந்து போனதால், அதே ஆண்டு அவரது குடும்பம் டெல்லிக்கு குடி பெயர்ந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தாயாரின் போட்டோவுடன் சுஷாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. படிப்போரின் கண்களை கலங்க வைக்கும் அளவிற்கு உருக்கமாக உள்ளது. அதை படிக்கும் போது சுஷாந்த் ஏதோ பிரச்சனையில் இருந்திருக்கிறார் என்பதை யூகிக்க முடிகிறது. 

View post on Instagram

இதையும் படிங்க: சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா?... தீயாய் பரவும் புகைப்படம்...!

அதில், "தெளிவில்லாத கடந்தகாலம் கண்ணீர் துளியில் இருந்து மறைகிறது. முடிவில்லா கனவுகள் புன்னகைக்கும், வேகமாக ஓடும் வாழ்க்கை இதற்கு இரண்டிற்கும் இடையில் பேரம் நடக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். கடைசியில் 'மா' என்று குறிப்பிட்டுள்ளார். இதை படிக்கும் போதே சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்திருப்பார் என்பதையும், அதனால் தான் இளமை பருவத்தில் இறந்த தனது தாயை நினைவு கூர்ந்துள்ளார் என்பதும் தெளிவாகிறது.