தமிழ் சினிமாவின் டாப் டென் ஹீரோக்களின் பட்டியலில் தான் இன்னும் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் நடிகர் சூர்யா கடைசி வெற்றிப்படம் கொடுத்து பத்து ஆண்டுகள் ஆகின்றன என்று சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை நிலவரம் அதுதான்.

201ல் வந்த ஹரியின் சிங்கம் தான் சூர்யாவுக்கு கடைசியாக ஓடிய படம். அதன் பின்னர் ‘மாசு என்கிற மாசிலாமணி,’24’,’சிங்கம் 2’,’சிங்கம்3’,’தானா சேர்ந்த கூட்டம்’என்று தொடங்கி கடைசியாக வெளியாகி சூப்பர் ஃப்ளாப் ஆகியுள்ள ‘என் .ஜி.கே’ வரை அத்தனை படங்களும் பெருங்கொண்ட நஷ்டம் ஏற்படுத்திய படங்கள் ஆகும். இந்த தொடர் தோல்விகள் பூசி மெழுகப்பட்டதற்குக் காரணம் அப்படங்கள் அத்தனையும் சூர்யாவின் சொந்தப்படங்கள் மற்றும் உறவினர்களால் தயாரிக்கப்பட்டவை.

விக்னேஷ்சிவன் இயக்கக்த்தில் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான’ தானா சேர்ந்த கூட்டம்’ படம் தோல்வியடைந்ததை ஒட்டி  அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு 45 கோடி நஷ்டம் ஏற்பட்டதால், தன்னுடைய நஷ்டத்தை ஈடுகட்ட சூர்யாவிடம் மீண்டும் கால்ஷீட் கேட்டிருக்கிறார்.சூர்யாவின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான என்.ஜி.கே படமும் தோல்வியடைந்தது. அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு 35 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த உண்மையை சூர்யா ரசிகர்கள் ஏற்காமல் என்.ஜி.கே படத்தை வெற்றிப்படம் என்று சமூகவலைத்தளங்கள் மூலம் நம்ப வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.அதுமட்டுமல்ல, என்.ஜி.கே. படத்தை விமர்சித்த, அதை தோல்விப்படம் என்று செய்தி வெளியிடுகிற மீடியாக்கள் பற்றி ஆபாசமான கருத்துக்களை பரப்பும் வேலையிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படமான காப்பானாவது  தன்னைக் காப்பாற்றுமா என்று கவலையுடன் காத்திருக்கிறார் சூர்யா.