actor surya fell down on one fans leg

லட்சக் கணக்கில் ரசிகர்களை வைத்துள்ளவர் நடிகர் சூர்யா.அஜித் விஜய் என பல நடிகர்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும்,சூர்யாவுக்கு என ரசிகர்கள் பட்டாளமே இருக்கு.....

இதெல்லாம் விடுங்க....

விக்னேஷ் சிவன் இயக்கத்தில்,சூர்யா நடித்து வெளிவரவுள்ள படம் தானே சேர்ந்த கூட்டம்...இந்த படம் நாளை திரைக்கு வர உள்ளது.

இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில்,சூர்யா ரசிகர்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர்.

அப்போது, சூர்யாவை பார்த்த ரசிகர்கள் ஓடி போய் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.

காலில் விழுந்த சூர்யா

ரசிகர்கள் தன் காலில்,விழுந்து ஆசிர்வாதம் வாங்க வருவதை பார்த்த ,நடிகர் சூர்யா இமைப்பொழுதில்,ரசிகர் காலில் விழுந்து,தயவு செய்து இது போன்று காலில் விழுந்து வணங்குவதை விட்டுவிடுங்கள் என கேட்டுக் கொண்டார்.

இதனை பார்த்த மற்ற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் ரசிகர்கள் காலில் விழுவதை விட்டுவிட்டு அமைதியான முறையில், ஜாலியாக உற்சாகத்துடன் சூர்யாவுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

இனியாவது ரசிகர்கள் நடிகர்கள் காலில் விழும் பழக்கத்தை கைவிடுவார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

இதற்கு முன்னதாக, நடிகர் ரஜினி கூட பல முறை சொல்லி இருந்தார், தாய் தந்தையிடம் காலில் விழலாம்...இது போன்று மற்றவர்களிடம் காலில் விழும் பழக்கம் இருக்க கூடாது என....

இதனை பிரதிபலிக்கும் விதமாக காலில் விழ வந்த ரசிகன் காலிலே விழுந்த நடிகர் சூர்யாவை பற்றிய பேச்சு தான தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.