இயக்குனர் ஹரியின் வெற்றி கூட்டணியில் ஆறாவது முறையாக சூர்யா கைகோர்க்க உள்ள திரைப்படம் 'அருவா'. இந்த படம் பற்றி ஏற்கனவே அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி, படத்தின் முன் ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகையை தேர்வு  செய்வது குறித்த பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடந்து வருவதாகவும்,   இந்த படத்தில் சூர்யாவிற்கு, ஜோடியாக நடிக்க வைக்க, ரஷ்மிக்கா மந்தனா மற்றும் மாளவிகா மேனன் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்த படக்குழு முடிவு செய்து லிஸ்டில் வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் திடீர் என கொரோனா பிரச்சனை காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்பு பணிகளும் முற்றிலும் முழுமையாக நிறுத்தப்பட்டது. கடந்த நான்கு மாதமாக, படப்பிடிப்பு பணிகள் நடைபெறாமல் அனைத்து பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

மேலும் நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் நடிக்க கதை ஒன்று கேட்டதாகவும், அந்த கதை அவருக்கு பிடித்து விட்டதாலும் அடுத்ததாக இந்த படத்தில் நடிக்க அவர் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியானது. இதனால் அருவா படம் டிராப் ஆகிவிட்டதாகஒரு தகவல் வெளியானது. ஆனால் இதுவரை இந்த தகவலை நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி என யாரும் உறுதி செய்யவில்லை. எனவே இது வதந்தியாக கூட இருக்க வாய்ப்பு உள்ளது.