'என்.ஜி.கே' மற்றும் 'காப்பான்' படத்தை மிகவும் எதிர்பார்த்த சூர்யா இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், தற்போது நம்பியிருக்கும் திரைப்படம் 'சூரரைப்போற்று'. இந்த படத்தை 'இறுதிச்சுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா சூர்யாவின் 38 வது படமாக இயக்கியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தை தொடர்ந்து. சூர்யா தன்னுடைய 39வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் சூர்யாவின் 40வது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் தனுஷை வைத்து 'அசுரன்' என்கிற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா தன்னுடைய 40 ஆவது படத்தை நடிக்க உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்க உள்ளார். 

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவலை தயாரிப்பாளர் தாணு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... "அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் #Suriya40 @theVcreations தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்" என பதிவு செய்துள்ளார்.

Scroll to load tweet…

ஏற்கனவே சூர்யா தாணு தயாரிப்பில் 'காக்க காக்க', 'மாயாவி' போன்ற படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன்பாக காமெடி நடிகர் சூரி வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.