நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது வாடிவாசல் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து அவர் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க உள்ளாராம்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாகடர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற பிப்ரவரி மாதம் 4-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

இந்நிலையில், வாடிவாசல் படத்துக்கு பின்னர் நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக தயாராக உள்ளதாம். நடிகர் சூர்யா ஏற்கனவே நந்தா, ஆறு மற்றும் அஞ்சான் போன்ற கேங்ஸ்டர் படங்களில் நடித்துள்ளார். இதில் நந்தா, ஆறு படங்கள் சூர்யாவுக்கு கைகொடுத்தாலும், லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்த அஞ்சான் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

மேலும் நடிகர் சூர்யா, ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால், அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ள படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.