Suriya look in Vikram : விக்ரம் படத்தில் வித்தியாசமான லுக்கில் சூர்யா.. ‘வெறித்தனம்’ என சிலாகிக்கும் ரசிகர்கள்

Suriya look in Vikram : விக்ரம் படத்தில் பகத் பாசில் அமர் என்கிற கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி சந்தானம் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக தெரிவித்திருந்த படக்குழு, சூர்யாவின் கேரக்டரை சஸ்பென்ஸாக வைத்திருந்தது.

Actor suriya character name and look in vikram movie revealed

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒன்றரை ஆண்டு இடைவெளிக்கு பின் வெளியாகி உள்ள படம் விக்ரம். கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதி போன்ற மாஸ் நடிகர்களும் நடித்துள்ளனர். அனிருத் இசை, கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, அன்பறிவின் ஸ்டண்ட் என மிகப்பெரிய டெக்னிக்கல் டீம் இப்படத்தில் பணியாற்றி உள்ளது.

விக்ரம் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீசாகி உள்ளது. அதிகாலை முதலே தியேட்டர்கள் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், நடிகர் கமல்ஹாசனின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் உற்சாகம் பொங்க கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழகம் முழுவதும் ரிலீசான பெரும்பாலான இடங்களில் இப்படம் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது.

Actor suriya character name and look in vikram movie revealed

சென்னையில் உள்ள வெற்றி தியேட்டரில் விக்ரம் படக்குழு அதிகாலை 4 மணி காட்சியை ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் நரேன் ஆகியோர் ரசிகர்களுடன் படத்தை பார்த்து ரசித்தனர். விக்ரம் படத்தில் பகத் பாசில் அமர் என்கிற கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி சந்தானம் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக தெரிவித்திருந்த படக்குழு, சூர்யாவின் கேரக்டரை சஸ்பென்ஸாக வைத்திருந்தது.

இந்நிலையில், அவரின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் சூர்யா இப்படத்தில் ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் நீண்ட தாடியுடன் வித்தியாசமான கெட் அப்பில் நடிகர் சூர்யா படு மாஸாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Vikram Movie Review : ஆண்டவர் ஆட்டம் வொர்த்தா?... வொர்த் இல்லையா? - விக்ரம் படத்தின் டுவிட்டர் விமர்சனம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios