இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க விஷம்! சூர்யா வெளியிட்ட வீடியோ!

நடிகர் சூர்யா முன்னணி நடிகர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி, ஏழை குழந்தைகளை படிக்க வைக்க அகரம் ஃபவுண்டேஷன், மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல விஷயங்களை செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது... ஒரு முறை நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்து வெளியிட்டுள்ளார். அதில் குழந்தைகள் மத்தியில் பேசும் சூர்யா, பிளாஸ்டிக்கால் வரும் தீமைகள், எந்தெந்த பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்ய முடியும்.... பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்கும் மாற்று பொருள் என்ன என்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார். 

இந்த வீடியோவுக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.